சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது
யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று 24ஆவது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது சென். பற்றிக்ஸ் கல்லூரி. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 46.4 ஓவர்களில் 153 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது.யாழ்ப்பாணக் கல்லூரி சார்பாக ரீ. டேமியன் (36), எஸ். கபிஷன் (32), அணித் தலைவர் எஸ். மதுசன் […]
