இணையம் மூலம் மோட்டார் வாகன திணைக்களப்பணிகள்
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் அனைத்து அமைப்புகளும் இன்று முதல் இணையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது அரசாங்கத்தின் பொது சேவைகளை நவீனமயமாக்குவதில் ஒரு முக்கிய படியைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில், இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாறையின் மீதமுள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் இரண்டு தொழில்நுட்ப பங்காளிகளின் உதவியுடன் நவீனப்படுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிமல் ரத்நாயக்க […]
