புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள். வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய ஆலோசனை மாநாடும் வாக்கெடுப்பும் கடந்த புதன்கிழமை (07) நடைபெற்றது. இந்நிலையில், வத்திக்கானில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படவுள்ளது. சிஸ்டைன் […]
