காவடி சுமந்து வழி படுவதன் ஐதீகம் என்ன?
காவடி- கா அடி! ‘‘முருகப் பெருமானே! உன் திருவடிகளில் வந்து விழுந்திருக்கும் என்னைக் காப்பாற்று!’’ என்பதற்காகவே, காவடி எடுக்கப்படுகிறது. காவடியில் முன்னும் பின்னுமாக இரு பகுதிகள் உண்டு. அவற்றில் முன் பகுதி, நாம் செய்த புண்ணியம். அது தெய்வத்திடம் நம்மை இழுத்துச் செல்கிறது. பின் பக்கம் இருக்கும் பகுதி நம்முடைய பாவம். அது நம்மைப் பின்னால் இழுக்கிறது. முயன்று, முயற்சி செய்து போய், நாம் தெய்வ அருளைப் பெறுகிறோம். இதுவே காவடியின் ஐதீகம். இடும்பன் மூலமாக வந்தது, […]
