ஒரே ஒரு நடிகரை வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படம்!
ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டுமே தோன்றி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு வர முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அசாத்திய சாதனையைப் படைத்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு அளவு 7’. இரா. பார்த்திபன்தான் இந்தச் சாதனையின் நாயகன். 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், உலகத் திரைத்துறையையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு கொலைக் குற்றத்திற்காகக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு சாதாரண நபர், […]
