தகவல்கள்

மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல் – ஜூலை 31 இறுதித் திகதி

job ads human rights

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை பாராளுமன்றத்தின் இணையத்தளத்தில் “விரைவான அணுகல்” என்பதன் கீழ் ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்” என்ற பெயரில் கிடைக்கப்பெறும். விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறித்த விண்ணப்பங்கள் அரசியலமைப்புப் பேரவையின் பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

கடித உறையின் இடதுபுற மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விதந்துரைத்தல்’ எனக் குறிப்பிடுமாறு கோரப்படுகிறது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்