நீங்க தூங்கும் போது கூட உங்க AI அவதார் உங்களுக்காக வீடியோக்களைப் பேசி முடிக்கும்!செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் கூகுள் நிறுவனம் தினமும் ஒரு மேஜிக் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஒட்டுமொத்த டெக் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு மாஸான அம்சம் தான் ‘கூகுள் ஜெமினி அவதார்’ (Google Gemini Avatar).
கேமரா முன்னாடி வந்து பேச வெட்கப்படுபவர்களுக்கும், நேரமில்லாமல் தவிப்பவர்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம்! இந்தத் தொழில்நுட்பம் மூலம் அச்சு அசல் உங்களைப் போலவே இருக்கும் ஒரு டிஜிட்டல் இரட்டையரை (Digital Clone) நீங்கள் உருவாக்க முடியும்.
- உங்கள் முகத்தை மட்டும் இது நகலெடுப்பதில்லை; உங்கள் சொந்தக் குரலையும் (Voice) அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்.
- நீங்கள் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை உரையாக (Text) டைப் செய்து கொடுத்தால் போதும். உங்கள் AI அவதார், உங்களது சொந்தக் குரலில், உதட்டசைவுகள் (Lip sync) மாறாமல் கணப் பொழுதில் வீடியோவாகப் பேசி அசத்தும்!
- கேமரா முன்னால் நின்று தடுமாறுவது, பலமுறை ரீ-டேக் எடுத்து நேரத்தை வீணடிப்பது போன்ற தலைவலிகள் இனி இல்லை.

