அனைவரின் வீடுகளிலும் இருக்கும் ஒரு தீராத தொல்லை என்றால் அது கரப்பான் பூச்சிதான்.கரப்பான் பூச்சிகள் உங்கள் சமையலறைக்குள் நுழைவதைத் தடுக்க உணவை சரியாக சேமிக்க வேண்டியது முக்கியம். இந்த பூச்சிகள் மோசமாக சேமிக்கப்பட்ட உணவை எளிதில் கண்டறிந்து உள்ளே நுழையக்கூடும். இதைத் தவிர்க்க, தானியங்கள் மற்றும் மாவு போன்ற உலர்ந்த பொருட்களுக்கு காற்று புகாத கொள்கலன்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
போரிக் அமிலம்
போரிக் அமிலம் கரப்பான் பூச்சிகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்று நம்பப்படுகிறது. கூடுதல் நன்மைகளைப் பெற, இந்த பொடியை வீட்டின் அனைத்து மூலைகளிலும் தரையிலும் சிறிது தூவ, கரப்பான் பூச்சிகள் அதனுடன் தொடர்பு கொண்டு இறந்து விடும். போரிக் அமிலம் ஈரமாக இருக்கும்போது பயனுள்ளதாக இருக்காது. இந்த விஷத்தை எந்த சூழ்நிலையிலு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் கைகளுக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலவையானது கரப்பான் பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். கரப்பான் பூச்சிகளை ஈர்ப்பதற்கு சர்க்கரை,தூண்டில் போல செயல்படுகிறது. பேக்கிங் சோடா அவற்றை எளிதில் கொல்லும். இந்த கலவையை கரப்பான் பூச்சி இருக்கும் மூலைகளில் தெளிக்க வேண்டும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த வழியாகும்.
வேப்பிலை
வேம்பு பல ஆண்டுகளாக பூச்சிகள் உட்பட பல விஷங்களுக்கு இயற்கைத் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பெண்ணெய் அல்லது பொடியில் கரப்பான் பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்த கூறுகள் உள்ளன. இதை எண்ணெய் வடிவில் பயன்படுத்த, ஒரு ஸ்ப்ரே போத்தலில் சிறிதளவு வேப்பெண்ணெயை தண்ணீரில் கலந்து, இந்த பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்கவும். இல்லையெனில் ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது, தண்ணீரை வடிகட்டி, இந்த திரவத்தை ஒரு ஸ்ப்ரே போத்தலில் ஊற்றவும். கலவையை பூச்சிகள் இருக்குமிடத்தில் இரவில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகளை அகற்றுவதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் இதுவும் ஒன்று.
மிளகு, வெங்காயம்,பூண்டு
மிளகுத் தூள், வெங்காய விழுது, பூண்டு ஆகியவற்றின் கரைசலை தயார் செய்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கவும். பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றி கரைசலை தெளிக்கவும். கலவையின் வாசனை கரப்பான் பூச்சிகளை விலக்கி வைக்கும்.

