விளையாட்டு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரைஇறுதியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இந்திய அணி சார்பாக ஸ்ரீ சரணி, தீப்தி சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 339 ஓட்டங்கள் மாபெரும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 48.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழந்து 341 ஓட்டங்களைப் பெற்று வெற்றிவாகைசூடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தியா சார்பாக அணித் தலைவி ஹர்மன் ப்ரீத்கர் 89 ஓட்டங்களை பெற்றதுடன் ஜெமீமா ரொட்ரிகர்ஸ் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

இதற்கமைய இந்தியாவும் தென்னாபிரிக்காவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உலக சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ