மருத்துவம்

திராட்சை விதைகளை தூக்கி போட வேண்டாம்.. காணப்படும் மருத்துவ குணங்கள்..!

திராட்சை விதைகளை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

விதைகளில்லா பழங்களைவிட, விதையுள்ள திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

திராட்சை விதைகளின் முக்கியப் பலன்கள்:

இதில் உள்ள அதிக ஆக்சிஜனேற்றப் பண்புகள் உடலில் உண்டாகும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயம் மற்றும் மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கும் கூறுகள் இதில் உள்ளன. இது நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்தவும் உதவும்.

காயங்களை விரைவாக ஆற்றும் கொலாஜனை உருவாக்க உதவுகிறது. இதனால் காயங்கள் விரைவில் குணமாகி, தோலின் அழகு அதிகரிக்கும்.

முடி உதிர்தலை தடுத்து, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

திராட்சை விதை சாறு, உடலில் நுழையும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தொடர்ந்து உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

திராட்சை விதைகளை தூக்கி எறியாமல் உணவில் சேர்ப்பது ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் அவசியம்.

You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்