மருத்துவம்

மார்பகப் புற்றுநோய் வர பத்து காரணங்கள்…!

மார்பகப் புற்றுநோயானது நாட்டில் பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவாகி வருகிறது. சமீப ஆண்டுகளில் இந்தச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

வாழ்க்கை முறை மாற்றம்

கடந்த சில தசாப்தங்களில் பெரியளவில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது இந்த மார்பக புற்றுநோய்க்கு வழிவகுத்தது. பல வாழ்க்கை முறை தொடர்பான காரணிகள் மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை

குறிப்பாக நகர்ப்புறங்களில் மோசமான உடல் செயல்பாடு நிலை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உடல் செயலற்ற தன்மை மார்பக புற்றுநோய் உட்பட புற்றுநோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

உடல் பருமன்

உடல் பருமன், குறிப்பாக, மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு வரும் உடல் பருமன், மார்பக புற்றுநோயை ஊக்குவிக்கும் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தாமதமான குழந்தைப்பேறு

பெண்களிடையே தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் முன்னுரிமை பெறத் தொடங்கியுள்ளதால், அவர்களில் பெரும்பாலோர் திருமணம் மற்றும் குழந்தை பிறக்கும் வயதை தாமதப்படுத்துகிறார்கள். குழந்தை பிறப்பதை தாமதப்படுத்துவது புற்றுநோயை வளர்ப்பதற்கான ஆபத்து காரணிகளில் ஒன்றாகும்.

இருப்பினும், மற்ற காரணிகளான தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது அல்லது தாய்ப்பால் சிறிது நேரமே கொடுப்பது ஆகியவை அடங்கும். ஏனெனில் தாய்ப்பால் மார்பக புற்றுநோயில் ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டுள்ளதை பெரும்பாலனோர் அறிவதில்லை.

மது அருந்துதல்

பெண்கள் குறைவாகவே மது அருந்துகின்றனர். ஆனால் சமீப ஆண்டுகளில், குறிப்பாக நகர்ப்புற பெண்களிடையே இந்த சதவீதம் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோய்க்கான காரணிகளில் ஒன்றாக மதுபானம் உள்ளது.

மேம்பட்ட பரிசோதனை வளர்ச்சி

புற்றுநோய் அதிகமாக பரவி வருவதால், ஓரளவுக்கு சிறந்த மருத்துவ பரிசோதனை நடைமுறைகளின் காரணமாக நிறைய பெண்களிடம் நோய் இருப்பதை கண்டறிய முடிந்தது.

மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், முன்கூட்டியே நோயறிதல் ஆகியவற்றின் விளைவாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கின்றன.

மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகள்

மார்பகப் புற்றுநோயின் விகிதாச்சாரம் பரம்பரை ரீதியாகவும் இருப்பது நிறுவப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு மரபணு பிறழ்வுகள் மற்ற பெண்களை விட மார்பக புற்றுநோயை அடிக்கடி உருவாக்கலாம்.

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடத்தில் மரபணு மாற்றங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே சமயம் மரபணு பாதிப்புக்கான சோதனை தொடர்பான பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

வெளிப்புற காரணிகள், சமூக மற்றும் பொருளாதார காரணிகள்

கடந்த மூன்று தசாப்தங்களாக, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கலுடன் தொடர்புடைய சமூக மாற்றங்கள் மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் காரணிகளில் மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.

ரசாயன பொருட்கள், கதிர்வீச்சு மற்றும் பிற மாசுபாடுகளுடன் தொடர்புகொள்வது மார்பக புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, நாட்டில் ஏற்படும் மார்பக புற்றுநோய் நிகழ்வுகளில் பல்வேறு சமூக-பொருளாதார காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் பெண்களுக்கு தரமான சுகாதாரப் வசதிகள் கிடைப்பதில்லை.












You may also like

expresstamil_health
மருத்துவம்

இரவில் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா?

நமது உடலில் கல்லீரல் மிக முக்கியமான மற்றும் பெரிய உறுப்பாகும். இது அடிவயிற்றின் மேல் வலதுபுறத்தில், உதரவிதானத்திற்கு கீழே மற்றும் இரைப்பைக்கு மேலே அமைந்துள்ளது.  செரிமானத்திற்கு தேவையான
மருத்துவம்

வழுக்கைத் தலையில் முடி வளரணுமா? 

முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம். பெரும்பாலான மக்கள்