விளையாட்டு

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடித்தலம் போட்டார்.

கடந்த மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் வீழ்த்தியவரான அஸ்வின் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஒதுங்கியதால் அவருக்கு பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஷ் லீக் (பி.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டிக்கு அழைக்க 4 அணிகள் முயற்சித்தன.

சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி சிக்சர்ஸ் மற்றும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணி நிர்வாகங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த நிலையில் பிக்பாஷ் லீக் தொடரில் அஸ்வின், சிட்னி தண்டர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

சிட்னி தண்டர் அணியின் ஜெர்சியில் அஸ்வின் என அச்சிடப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்தாண்டின் பிக்பாஷ் லீக் தொடர் டிசம்பர் 14ம் திகதி தொடங்குகிறது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ