விளையாட்டு

இங்கிலாந்து அணியை தோற்கடித்த தென்னாபிரிக்கா

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நேற்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்புக்கு 330 ஓட்டங்களை பெற்றது.

மெத்திவ் ப்ரீட்கே 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.இதனையடுத்து, துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 61 ஒட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். 

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ