தகவல்கள்

முச்சக்கர வண்டி சாரதி கழுத்தை வெட்டி கொலை

கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கர வண்டி  சாரதி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடை, கெட்டபுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மாராம வீதி பிரதேசத்தில்  கழுத்து வெட்டப்பட்டு முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பு, மாதம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் தெமட்டகொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தெமட்டகொடை கெட்டபுல பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெமட்ட கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்