தகவல்கள்

சீன அரசு அறிவித்துள்ள அதிரடி திட்டம்

நடப்பு ஆண்டு ஜனவரி 1ம் திகதியிருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.

இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும் அதாவது ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை வேகமாக சரிந்ததால் சீனா கவலை அடைந்துள்ளது.

குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை ஆகியவை சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தொகை சரிவதால் கவலை அடைந்துள்ள சீனா அதை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, இந்த புதிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்