தகவல்கள்

ஹவாயில் வீரியமடையும் சுனாமி அலைகள்

ஹவாய் கடற்கரையை 5.7 அடியில் அதிக அலைகள் தாக்குவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 

ஹவாயின் மௌய் – கஹுலுயில் 5.7 அடி (1.74 மீ) உயரத்தை எட்டும் அலை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஹவாயின் ஹைலோவில் 4.9 அடி (1.5 மீ) உயரத்தில் அலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி அலைகளின் தாக்கம் வீரியமடைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஹவாயின் முக்கிய நகரான ஓஹுவின் ஹலீவாவில் 4 அடி உயர அலை பதிவு

செய்யப்பட்டுள்ளது.

தீவின் அவசரகால நிர்வாகத்தின் சமீபத்திய அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியேற்ற மண்டலத்திற்கு அப்பால் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சுனாமி அலைகள் தற்போது ஹவாயை தாக்கி வருவதாகவும், சுனாமி எச்சரிக்கை நடைமுறையில் இருப்பதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்லும் வரை அவர்கள் எச்சரிக்கை பகுதிக்குள் மீண்டும் உள்ளே நுழைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, சுனாமி அலைகள் அமெரிக்க கடற்கரைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன.

அதன்படி, சுனாமியின் முதல் அலைகள் ஹவாயின் கடற்கரைகளை அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த தரவுகளின்படி, ஹவாயின் ஓஹு தீவின் வடக்குக் கரையில் உள்ள ஹலீவாவில் நீர் மட்டம் 4 அடிக்கு (1.2 மீட்டர்) மேல் பதிவாகியுள்ளது. அதிக அலைகள் நெருங்கும்போது நீர் மட்டங்கள் உயர்ந்து குறைவதை காண வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

அதேவேளை, அலாஸ்காவை முன்னதாகவே முதல் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தற்போது அலைகள் ஹவாயைத் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் சுனாமி அலைகள் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக எச்சரித்துள்ளது. 

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்