தகவல்கள்

இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன்

இந்திய மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று பதவியேற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை M.Pகளாக இருந்த தி.மு.க வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம் எம்.எம்.அப்துல்லா மற்றும் தி.மு.க கூட்டணி சார்பில் தெரிவான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது.

அவர்களுக்குப் பதில் புதிய உறுப்பினர்களாக 6 பேர் ஏற்கனவே போட்டியின்றி தெரிவாகினர்.

அவர்களில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன் ஆகிய 4 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில்,  மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் தமிழில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்