நமது உடலுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் தேவையானதாக உள்ளது. அதில் வைட்டமின்- டியும் முக்கியமான ஊட்டச்சத்தாகும்.
வைட்டமின் டி நமக்கு சூரிய ஒளியின் வழியாக அதிகமாகக் கிடைக்கிறது என்றாலும் சூரிய ஒளி கிடைக்காத சமயங்களில் அவற்றைப் பெறுவது எப்படி என இப்போது பார்க்கலாம்.
வைட்டமின் டி ஊட்டச்சத்தை நாம் சூரிய ஒளியின் வழியாகவே பெறுகிறோம். ஆனால் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் சூரிய ஒளி அரிதாகவே கிடைக்கிறது.

மேலும் குளிர்காலங்களில் நம்மால் அதிகமாக சூரிய ஒளியைப் பெற முடிவதில்லை. எனவே இந்த சமயங்களில் நாம் வைட்டமின் டியை உணவின் வழியாக பெற வேண்டி உள்ளது.
வைட்டமின் டி நமது வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான ஊட்டச்சத்தாக உள்ளது. இது சரியான அளவில் கிடைக்காதபோது அதனால் நாம் பல உடல் நலப் பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
எனவே உடலுக்கு நன்மை பயக்கும் சில வைட்டமின் டி உணவுகளை இப்போது பார்க்கலாம்.
- சோயா, பாதாம், ஓட்ஸ் பால்
- ஆரஞ்சு ஜூஸ்
- முட்டை
- ஹார்ட் லிவர் எண்ணெய்
- காளான்
- மத்தி
- வலுவூட்டப்பட்ட தானியங்கள்
- சால்மன்
- மாட்டிறைச்சியின் கல்லீரல்
- கானாங்கெளுத்தி

