தகவல்கள்

நாட்டில் சிக்குன்குனியா பாதிப்புகள் உயர்வு

சிக்குன்குனியா வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்(WHO) சிக்குன்குனியா எனும் நுளம்பு மூலம் பரவும் வைரஸ் பற்றிய அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய கண்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியாக இருக்கும் டயானா ரோஹாஸ் ஆல்வரஸ் கூறுகையில், உலகம் முழுவதும் 119 நாடுகளில் வசிக்கும் சுமார் 5.6 பில்லியன் பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கின்றனர்.

“2004-2005 ஆம் ஆண்டுகளில் உலகம் தாண்டிய பரவல் ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்படுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.அந்த காலத்தில் சிறிய தீவுகள் முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த புதிய பரவல் இந்தியப் பெருங்கடல் தீவுகளான ரீயூனியன், மயோட்டே மற்றும் மொரிஷியஸ் போன்ற இடங்களில் பெரும் அளவில் பரவத் தொடங்கியது.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா, மற்றும் தென் ஆசியா(இலங்கை உட்பட) போன்ற நாடுகளிலும் பரவல் தொடங்கியுள்ளது.

விரிவான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்த வைரஸ் மீண்டும் உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. 

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்