விளையாட்டு

இந்திய பெண்கள் அணி படைத்த உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது.

இந்திய தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா, பிரதிகா ராவத் இந்த புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, T-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.T-20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

இந்நிலையில், நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்தை (258/6, 50 ஓவர்) 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி (262/6, 48.2 ஓவர்) வீழ்த்தியது.

இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா மற்றும் பிரதிகா ராவத், அதிரடியாக விளையாடி 48 ஓட்டங்களை சேர்த்து, புதிய உலக சாதனை படைத்தனர்.

12 போட்டிகளில் இந்த ஜோடி, 1000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் 9 முறை 50+ ஓட்டங்களை இந்த ஜோடி எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ