சினிமா

பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 9-வது சீசன் தொடக்க இருக்கிறது.

தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 9 தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம்.

அக்டோபர் 3-ம் தேதி, விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, வீடு எப்படி இருக்கிறது என்று காண்பிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, 4-ம் தேதி முதல் எபிசோடு ஷூட்டிங் நடைபெறுகிறது, 5-ம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட