தகவல்கள்

டிரம்பின் ஆதரவாளரை சுட்டு கொன்ற வாலிபர் கைது

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக் கழகத்தில் கடந்த 10-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலையாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு 22 வயது டெய்லர் ராபின்சன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெய்லர் ராபின்சனை கைது செய்ய அவரது குடும்பத்தி னரும், நண்பரும் உதவியதாக போலீசார் தெரிவித்தனர்.

ராபின்சன் எந்த கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. ஆனால் பாசிசத்தை எதிர்க்கும் குழுவில் இருந்தார். இதனால் பாசிசத்தின் மீதான வெறுப்புதான் சார்லி கிர்க்கை டெய்லர் ராபின்சன் கொலை செய்த தற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெய்லர் ராபின்சன் பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் மீட்கப்பட்ட ஷெல் உறைகளில் பாசிசத்துக்கு எதிரான சின்னங்கள், பாடல் வரி பொறிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்