விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கிறிஸ் வோக்ஸ் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

36 வயதாகும் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2034 ரன்களையும், 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

122 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 1524 ரன்களும், டி20 போட்டிகளில் 147 ரன்களும் எடுத்துள்ளார்.

கடந்த மாதம் ஓவலில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் தோள்பட்டை காயத்துக்கு வலது கையில் கட்டுப்போட்ட நிலையிலும் ஒற்றைக்கையால் பேட் செய்ய களமிறங்கி கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ