தகவல்கள்

பலஸ்தீனம் தொடர்பில் ஹமாஸின் அதிரடி அறிவிப்பு

சுதந்திர பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய இஸ்ரேலிய கோரிக்கைக்கு, இந்த பதிலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, காசா போரில் 60 நாள் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தையும் நோக்கமாகக் கொண்ட ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் முடிவின்றி இடைநிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், இஸ்ரேலால் இராணுவ ரீதியாக பாதிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பு, ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான,

முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசு நிறுவப்படும் வரை ஆயத எதிர்ப்பை கைவிடமுடியாது என்று தெரிவித்துள்ளது.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதை இஸ்ரேல் ஒரு முக்கிய நிபந்தனையாக கூறி வரும் நிலையில், ஹமாஸ் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்