தகவல்கள்

இராணுவப்பயிற்சி மேற்கொள்ளும் ரஷ்யா -சீனா

ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரானகூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்திவருவதா தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இது “Maritime Interaction-2025” எனப்படும் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டமிட்ட கூட்டுப் பயிற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வரும் ஓகஸ்ட் 05 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சிகள், ரஷ்யாவின் பசிபிக் கடற்படையின் பாரிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களும், சீனாவின் இரண்டு Destroyer கப்பல்களும் உள்ளடக்கிய குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றன.

இவற்றில் இரு நாடுகளின் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு கப்பலும் பங்கேற்றுள்ளன.

கடல், வான்வழி பாதுகாப்பு, புலனாய்வு, தற்காப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்வெடெவ் வழங்கிய “பிரச்சனையூட்டும்” கருத்துகளுக்குப் பிறகு அணு நீர்மூழ்கிக் கப்பல்களை உரிய பகுதிகளில் நிறுத்த உத்தரவிட்ட  இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெறுகிறது.எனினும், இந்த பயிற்சிகள் முன்பே திட்டமிடப்பட்டவை.

ரஷ்யா-சீனா இரண்டும் 2022-ல் உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன் “no-limits” என்ற ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்நிலையிலும் இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்