தகவல்கள்

அரிய வகை நோயால் 300 நாட்கள் தூங்கும் நபர்

இந்தியர் ஒருவர் தன்னுடைய அரிதான நோய் காரணமாக வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் அதிசய மனிதராக உள்ளார்.

ஒரு நபர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் போதுமானது. அதற்கு மேல் தூங்கினால் மந்த நிலைக்கு சென்று விடுவார்கள். ஆனால், இங்கு நபர் ஒருவர் வருடத்திற்கு 300 நாட்கள் தூங்குகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இந்திய மாநிலமான ராஜஸ்தான், பத்வா கிராமத்தில் வசிக்கும் நபர் புர்காராம். இவர் Axis Hypersomnia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது இது TNF-ஆல்பா எனப்படும் மூளையின் புரதத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போது ஏற்படும் ஒரு அரிய தூக்கக் கோளாறாகும்.

இதன் காரணமாக இவர் மாதத்திற்கு 20 முதல் 25 நாட்கள் தொடர்ந்து தூங்குகிறார். 23 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவரது வாழ்க்கை முறையே மாறிவிட்டது.

குறிப்பாக இவர் தூங்கினால் எழுப்புவது கடினமாகும். இவர் தூங்கும்போது குளிக்க வைத்தல் மற்றும் உணவளித்தல் உள்ளிட்ட அன்றாட வேலைகளை அவரது குடும்பத்தினர்  செய்வதாக  கூறப்படுகின்றது.

 இதற்காக இவர் மருத்துவ உதவியை நாடினாலும் அவருக்கான பிரச்சனை தீர்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.  

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்