விளையாட்டு

2028 ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற இந்தியா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 2028 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நிலையில் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இந்தியா நேரடி தகுதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸில் 2028 ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி, ஜூலை 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் 2ஆவது போட்டி மாலை 6:30 மணிக்கும் தொடங்கும்.

T20 வடிவத்தில் கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில், ஒலிம்பிக்கில் விளையாட உள்ள 6 அணிகளை பிராந்திய தகுதி முறையைப் பயன்படுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் போட்டியை நடத்தும் நாடாக அமெரிக்கா நேரடி தகுதி பெறும். ஒவ்வொரு பிராந்தியத்திலும், T20 தரவரிசையில் முன்னணியில் உள்ள அணி தகுதி பெறும் என கூறப்படுகிறது.

இதன்படி, ஆசியாவில் இருந்து இந்தியாவும், ஓசியானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்தும் மற்றும் ஆபிரிக்காவில் இருந்து தென் ஆபிரிக்காவும் தகுதி பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில், இன்னும் ஒரு அணிக்கு வாய்ப்புள்ள நிலையில், அது எவ்வாறு தேர்வு செய்யப்படும் என முடிவு செய்யப்படவில்லை.

இந்த முறையால், பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறாது என கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இந்த தேர்வு முறைக்கு அதிருப்தி தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ